உங்கள் செல்லிடப்பேசியிலிருந்து ரொக்கமில்லா பணப் பரிமாற்றம்!

அண்மைக் காலமாக இந்தப் பெயரை அதிகமாகக் கேள்விப்பட்டு வருகிறோம். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இப்படி பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றுக்கு மத்தியில் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கான வழிமுறைகளும், சாத்தியக்கூறுகளும் அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை யாருமே தவிர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த வகை பரிமாற்றங்களின்போது, பணம் வங்கிக் கணக்கு வழியாகத்தான் “கை மாறுகிறது’. ஆனால் இந்த வகை பரிமாற்றங்களை மக்களிடையே பரவச் செய்யவும், அவற்றை பாப்புலர் ஆக்கவும் அதற்கான சில சேவைக் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், பெட்ரோல் உள்ளிட்ட பல தேவைகளுக்குப் பயன்படுத்தும்போது, தனியாக கட்டணச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் நாட்டுக்குப் புதியதல்ல. ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுதான். இந்தப் பரிவர்த்தனைக்காக ஏராளமான செல்லிடப்பேசி செயலிகளும் செல்லிடப்பேசி வர்த்தக முறைகளும் இருக்கின்றன. தற்போது, அதன் சேவைகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், அதன் பயன்பாடுகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.
செல்லிடப்பேசி வழியாக ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஸ்மார்ட்போன்தான் வேண்டும் என்பது கட்டாயமில்லை. சில வசதிகளுக்கு இணைய வசதி கூடத் தேவையில்லை என்பது பலருக்குத் தெரியாது. உங்களுடைய செல்லிடப்பேசி எண் இருந்தால் போதுமானது.
செல்லிடப்பேசி வழி வங்கிச் சேவைகளை 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும். எளிதாகவும் பயன்படுத்தலாம்.
யுபிஐ அல்லது
மொபைல் வங்கியியல்
“யூபிஐ’ (யூனிஃபைட் பேமெண்ட் இண்டர்ஃபியரன்ஸ்) அல்லது மொபைல் வங்கியியல் என்ற சேவையின் பயன்பாடும் தற்போது அதிகரித்து வருகிறது. மொபைல் வங்கி சேவையை அனைத்து வங்கிகளும் சில ஆண்டுகளாகவே வழங்கி வருகின்றன.
உயர் மதிப்பு கரன்ஸி மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு, ரொக்கமற்ற பரிமாற்றத்தின் யுபிஐ சேவையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு, இணைய வசதி அவசியமாகும். 24 மணி நேரமும் வங்கிச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்.
மொபைல் வங்கியியல் என்பதால், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி விட முடியாது.
சில வங்கிகள் அதற்காக தனியாக முகவரியையும், கடவுச்சொல்லையும் உருவாக்கித் தருகின்றன. ஆனால், இது மின்னஞ்சல் கணக்கை உருவாக்குவதைப் போல் எளிதானது. இதன் மூலம் பணம் செலுத்துதல், அதே வங்கியிலோ அல்லது மற்ற வங்கிகளிலோ இருக்கும் வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றுதல், இணையவழி வர்த்தகங்களுக்குப் பணம் செலுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
சில வங்கிகள் நமது வங்கி கணக்குப் புத்தகத்தில் இருக்கும் சிஐஎஃப் (கஸ்டமர் ஐடண்டிஃபிகேஷன் நம்பர்) எண்ணைக் கோருகின்றன. இது இன்னும் பாதுகாப்பானது. இதன் மூலம் மொபைல் வங்கிக் கணக்கைத் தொடங்கி இணையவழி வழியிலோ அல்லது ஏடிஎம் அட்டையுடனோ இணைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம், வங்கிச் சேவையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மொபைல் வங்கி சேவையின் மூலம் பயன்பாடுகளை அதிகரிப்பதற்கு, தற்போது வங்கி நிர்வாகங்களே ஊக்கப்படுத்துகின்றன. சலுகைகளை வழங்குகின்றன.
இது தவிர, வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கு மொபைல் வர்த்தக சேவைகளையும் வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. பிரபல மொபைல் வர்த்தக நிறுவனமான “பேடிஎம்’ பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் போலவே, “ஸ்டேட் பேங்க் பட்டி’ என்ற செல்லிடப்பேசி வர்த்தகச் செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதே வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் “பிஎன்பி மொபைல் ஈஸ்’, சிட்டி யூனியன் வங்கியின் “மொபைல் பேங்கிங் பிளஸ்’, பேங்க் ஆஃப் பரோடாவின் “பரோடா எம்-பே’ போன்ற செல்லிடப்பேசி செயலிகளும் நடைமுறையில் உள்ளன.
அவற்றின் மூலம், பொருள் வாங்குதல், செல்லிடப்பேசி ரீசார்ஜ், உணவகங்களில் பணம் செலுத்துதல், ரயில் மற்றும் பேருந்து முன்பதிவு போன்ற சேவைகளைப் பெறலாம். தனியார் வங்கிகளும் இத்தகைய இணைய பரிமாற்றத்துக்கான செயலிகளை வழங்குகின்றன.
செல்லிடப்பேசி வழியில் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இதுபோல் பல்வேறு வழிகளும் உள்ளன. புதிதாகக் கேட்கும்போது, புரியாத விஷயமாக இருக்குமோ என்று தயக்கம் தோன்றும். தொடக்கத்தில் கடினமாகத் தோன்றினாலும், இந்த வகை பரிவர்த்தனைகள் எளிமையானவை. பாதுகாப்பானவை கூட!
யூஎஸ்எஸ்டி

பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் செல்லிடப்பேசி எண்ணை வங்கியில் பதிவு செய்ய வேண்டிது அவசியம். அதுதான் முதல் படி.
செல்லிடப்பேசி மூலம் செயல்படும் “யூஎஸ்எஸ்டி’ என்ற பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த, இணைய வசதி வேண்டும் என்ற அவசியமில்லை.
முதலில், உங்களுடைய செல்லிடப்பேசியில் இருந்து “யி99லி’ எண்ணை அழைக்க வேண்டும்.
பின்னர், உங்களுடைய வங்கியின் சுருக்கமான முதல் 3 எழுத்துகளையோ, கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையின் ஐஎஃப்எஸ்சி எண்ணின் முதல் 4 எழுத்துகளையோ, வங்கி எண்ணின் முதல் இரண்டு எழுத்துகளையோ குறிப்பிட வேண்டும். அதன் பின்னர், வங்கிக் கண்டு இருப்புநிலை, மினி ஸ்டேட்மெண்ட், பணம் அனுப்புதல் ஆகிய சேவைகளைப் பெற முடியும். இருப்புநிலையைக் கண்டறியவும் பணம் அனுப்பவும் உங்களுடைய வங்கிக் கணக்கின் கடைசி 4 எண்களை அழுத்த வேண்டும். மொபைல் பின்னைப் பெறுவதற்கு வங்கி அட்டையின் கடைசி 6 எண்கள் மற்றும் தேதி, மாதம் ஆகிய 10 இலக்கங்களை அழுத்த வேண்டும். இந்த “யூஎஸ்எஸ்டி’ சேவையைப் பயன்படுத்தி நமது வங்கிக் கணக்கின்
அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

(தினமணி 26-12-2016)

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s