Author Archives: பிரவீண்

ஜி.எஸ்.டி: உண்மை என்ன?

ஜி.எஸ்.டி. வரி விகித நிர்ணயக் கூட்டத்தில் தங்கம் மீதான வரி விகிதம் முடிவானதும், “ஜிஎஸ்டி வரியால் நாடு முழுவதும் தங்கம் விலை அதிகரிக்கும்’ என்று பிரபல ஆங்கில நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டது. அதே நாள், “ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் கேரளத்தில் தங்கம் விலை குறையும்’ என்று அந்த மாநிலத்தில் வெளியாகும் மலையாள மொழி நாளிதழ்கள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அப்பா – சிறுகதை

அப்பா இல்லை. போய் சேர்ந்துவிட்டார் என்ற தகவல் வந்த போது, அழத் தோன்றவில்லை மகாவுக்கு. அவர் மறைவுக்கெல்லாம் அழுது கண்ணீரைத் தீர்த்துடக் கூடாது என்று தீர்மானித்தாள். அப்பாவை நினைக்கும் போதெல்லாம் நல்ல சம்பவம் எதுவும் அவள் நினைவுக்கு வரவில்லை. எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் அவரது குணமும், அதனால் பாதிக்கப்பட்ட தனது இளம் பருவம் மட்டுமே ஞாபகத்துக்கு வந்தது, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கசப்பான உண்மை

÷கடந்த சில ஆண்டுகளாகவே மழை தமிழர்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பெய்த பெருமழையால், சென்னை உள்பட சில மாவட்டங்கள் நீரில் மூழ்கின. ஆனால், நிகழாண்டிலோ மழை பொய்த்து, வறட்சியால் மடிகிறோம். ÷தொழில்நுட்பமும் நகரமயமாகும் வாழ்க்கை முறையும் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், நம் நாட்டில் 60 சதவீத மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். அவர்களின் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வேண்டாம் பிரிவினை கோஷம்

“தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு’ என்று பாடினார் நாமக்கல் கவிஞர். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம். ஐவகை நிலங்களாகப் பிரிந்து குன்றாத இலக்கிய வளங்களுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நாம். அதே நேரத்தில், இந்திய ஒருமைப்பாட்டுடன் தமிழகம் ஒன்றியிருந்ததற்கான ஆதாரங்கள், இமயமலையில் சேர மன்னன் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

உங்கள் செல்லிடப்பேசியிலிருந்து ரொக்கமில்லா பணப் பரிமாற்றம்!

அண்மைக் காலமாக இந்தப் பெயரை அதிகமாகக் கேள்விப்பட்டு வருகிறோம். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இப்படி பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றுக்கு மத்தியில் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கான வழிமுறைகளும், சாத்தியக்கூறுகளும் அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை யாருமே தவிர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வகை பரிமாற்றங்களின்போது, பணம் வங்கிக் கணக்கு வழியாகத்தான் “கை மாறுகிறது’. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அரசியல் கூடாது

அண்மைக் காலத்தில் உயர்கல்வி நிலையங்கள் அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் “அனைவருக்கும் கல்வி’ என்ற இலக்கை நாம் அடைய முடியவில்லை. பள்ளிப் பருவத்திலேயே படிப்பை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. தொழில்நுட்ப வசதிகளை குழந்தைகள்கூட சரளமாகப் பயன்படுத்தி வரும் இன்றையச் சூழலில், கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் போதுமான அளவில் இன்னமும் நுழையவில்லை. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

இதிலுமா அரசியல்?

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில், எங்கள் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டிருந்தோம். அனைவருமே இந்த நடவடிக்கையை ஆதரித்தாலும், நடைமுறை சிக்கல்கள் இருக்கவே செய்தன. வங்கிகள் செயல்படத் தொடங்கியதும் வீட்டிலிருக்கும் அனைவரும் முடிந்த அளவு பணத்தை எடுத்தோம். பல இடங்களில் வங்கி அட்டைகளை ஏற்று கொண்டனர். திட்டமிட்டு செயல்பட்டதால், குழப்பங்கள் எதுவும் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment