Category Archives: Uncategorized

சுவாமி விவேகானந்தர் – கவிதை

கடவுளை நேரில் பார்த்திட வேண்டிபரமஹம்ஸரை நாடிச் சென்றாய்…மானுட சேவையில் இறைவனைக் கண்டுஊருக்கெல்லாம் உற்சாகமளித்தாய்… அடிமை நாட்டின் உயர்ந்த பெருமையைஅமெரிக்காவில் உரக்கச் சொன்னாய்…இருண்டு கிடந்த மாந்தரின் நெஞ்சில்வீரக் கனலை மூட்டி விட்டாய்… துறவியர் கூட்டத்தைப் போர்ப்படையாக்கிஅகிலமெல்லாம் அனுப்பி வைத்தாய்முன்னோர் காட்டிய அன்பு மதத்தைஉலகோர் சுவைத்திட அடித்தளமிட்டாய் நூறு இளைஞர்களை எழுப்பிட வேண்டிநூறாயிரம் மைல்கள் பயணம் செய்தாய்சுதந்திர பாரதம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

முதல் முறையாக…

விரைவில் மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது. எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு முதன்முறையாக வாக்களிக்கப் போகும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும், 18 முதல் 19 வயது வரையுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இது மொத்த வாக்காளர்களில் 1.66 சதவீதம். இந்த முதன்முறை வாக்காளர்கள்தான், அடுத்த மக்களவையைத் தீர்மானிக்கப் போகிறார்கள். நாட்டின் மக்கள்தொகை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

இதுவல்ல கருத்துச் சுதந்திரம்!

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 40 சி.பி.ஆர்.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்}ஏ}முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதால், அந்நாட்டின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கலாம் என்று மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்தன. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சென்னை வானொலி-80

இந்திய மக்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்த ஊடகம் வானொலி. காலை 5.55 மணிக்கு விக்டர் பரஞ்சோதி இசையமைத்த அகில இந்திய வானொலியின் பிரத்யேக இசையுடனும், பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த வந்தே மாதரம் பாடலுடனும் தொடங்கும் நிகழ்ச்சிகள், இரவு 12 மணி வரை நீளும். வானொலி சேவைகள் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தாலும், சென்னை வானொலி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

எல்லா சிலை​க​ளும் வழி​ப​டத்​தக்​க​வையே!

அ​ண்​மை​யில் நடை​பெற்ற திரி​புரா மாநில தேர்​த​லில் 25 ஆண்​டு​கள் ஆட்சி​யில் இருந்த கம்​யூ​னிஸ்ட் கட்சி தோற்​க​டிக்​கப்​பட்டு, பாஜக கூட்டணி வெற்​றி​பெற்​றது. தேர்​தல் முடி​வு​கள் வெளி​யா​ன​துமே, மாநி​லத்​தில் இருந்த லெனின் சிலை உடைக்​கப்​பட்​டது. அதைத் தொடர்ந்து, தமி​ழக பாஜக மூத்த தலை​வர் ஹெச்.​ரா​ஜா​வின் முக​நூல் பக்​கத்​தில், ‘அடுத்து தமி​ழ​கத்​தில் ஈ.வெ.ரா. சிலைக்கு’ என்று பதி​வி​டப்​பட்​டி​ருந்​தது. அதற்கு பலத்த … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

படிக்கும் நேரம் கண்டறிவோம்!

சென்னையில் நடைபெற்ற 41-ஆவது புத்தகக் கண்காட்சி பெரும் ஆரவாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது. நாற்பத்தொரு ஆண்டுகளாக வாசிப்புக்கான திருவிழா நடைபெறுவது பெரிய விஷயம்தான். சென்னையில் தொடங்கியது, பின்னர் ஒரு பதிப்பாளரின் தனி முயற்சியில் கோவையில், அதன் பிறகு தமிழகத்தின் வேறு சில இடங்களில் வருடாந்திர விழாவாகிவிட்டது. புத்தகங்களுக்காக இப்படி நடப்பது வரவேற்கத்தக்கதுதான். புத்தகப் பிரியர்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

விருது பெற்ற மாணிக்க மாணவர்கள்

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்’ என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்ததுதான். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பல்வேறு சமூக நல அமைப்புகள் இயங்கி வருகின்றன. அவற்றில், “நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வலை தகவல் – மத்திய அரசுத் துறைகள்

28-08-2017 மத்திய வர்த்தகத் துறை வலைதள முகவரி: www.http://commerce.gov.in மத்திய இணை அமைச்சர்: நிர்மலா சீதாராமன் (தனிப் பொறுப்பு) இந்தத் துறையில், செயலர், கூடுதல் செயலர் (நிதி ஆலோசகர்), 4 கூடுதல் செயலர்கள், 14 இணை செயலர்கள் உள்ளிட்ட ஏராளமான உயரதிகாரிகள் பணியாற்றுகின்றனர். சர்வதேச பொருளாதார கொள்கை பிரிவு, வெளியுறவு கொள்கை பிராந்திய பிரிவு, ஏற்றுமதி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஜி.எஸ்.டி: உண்மை என்ன?

ஜி.எஸ்.டி. வரி விகித நிர்ணயக் கூட்டத்தில் தங்கம் மீதான வரி விகிதம் முடிவானதும், “ஜிஎஸ்டி வரியால் நாடு முழுவதும் தங்கம் விலை அதிகரிக்கும்’ என்று பிரபல ஆங்கில நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டது. அதே நாள், “ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் கேரளத்தில் தங்கம் விலை குறையும்’ என்று அந்த மாநிலத்தில் வெளியாகும் மலையாள மொழி நாளிதழ்கள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அப்பா – சிறுகதை

அப்பா இல்லை. போய் சேர்ந்துவிட்டார் என்ற தகவல் வந்த போது, அழத் தோன்றவில்லை மகாவுக்கு. அவர் மறைவுக்கெல்லாம் அழுது கண்ணீரைத் தீர்த்துடக் கூடாது என்று தீர்மானித்தாள். அப்பாவை நினைக்கும் போதெல்லாம் நல்ல சம்பவம் எதுவும் அவள் நினைவுக்கு வரவில்லை. எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் அவரது குணமும், அதனால் பாதிக்கப்பட்ட தனது இளம் பருவம் மட்டுமே ஞாபகத்துக்கு வந்தது, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment